மும்பை: சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் கலக்க, பெங்களூரு அணி 12 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 89 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது.
சென்னை அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை துவக்கிய பெங்களூரு அணி, துவக்கத்தில் அதிரடி காட்டியது. ஆனால், கேப்டன் கோலியின் விக்கெட்டை 8 ரன்களுக்கே காலிசெய்தார் சாம் கர்ரன்.
பின்னர், 15 பந்துகளில், 34 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல்லை ஷர்துல் தாகுர் திருப்பியனுப்பினார். அதன்பிறகு, சிறிதுநேரத்தில், வாஷிங்டன் சுந்தரை 7 ரன்களில் அவுட்டாக்கினார் ஜடேஜா.
பின்னர், சிறிது இடைவெளியிலேயே, முக்கிய பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல், ஜடேஜா பந்தில் பெளல்டு ஆனார். அதனையடுத்து, களம் கண்ட டேன் கிறிஸ்டியனை தனது நேரடி த்ரோ மூலம் ரன்அவுட் செய்தார் ஜடேஜா.
ஆனாலும் ஓயாத ஜடேஜா, சிறிதுநேரத்திலேயே, ஆபத்தான டி வில்லியர்ஸையும் கிளீன் பெளல்டு ஆக்கி, பெங்களூருவின் தோல்வியை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டார்.
அவருக்கு அடுத்துவந்த இம்ரான் தாஹிர், ஹர்ஷல் படேலை பெளல்டு ஆக்க, பெங்களூரு அணி, 12 ஓவர்களிலேயே, 7 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 89 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது அந்த அணி.
தற்போதைய நிலையில், 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்க, 48 பந்துகளில், 103 ரன்களை எடுத்தாக வேண்டிய கடும் நெருக்கடியில் உள்ளது கோலியின் அணி.