ராஞ்சி: ஜார்க்கண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி கல்வியமைச்சர் ஜகர்நாத் கார்களை பரிசாக வழங்கினார்.

அம்மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 12ம் வகுப்பு, 10ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் யார் என்பது வெளியானது. பிளஸ் 2 தேர்வில் 457 மதிப்பெண்களுடன் அமித் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்களுடன் மனிஷ் குமார் கடியார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

தனையடுத்து, வாக்குறுதி அளித்தபடி ராஞ்சியில் உள்ள சட்டசபை வளாகத்தில் நிகழ்ச்சியில், கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கார்களின் சாவியை மாணவர்கள் அமித் மற்றும் மனீஷிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜகர்நாத், வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளேன். முதலிடங்களுக்கு கார்களைக் கொடுப்பதன் நோக்கம். நன்றாக படிக்கும் இவர்களை மேலும் ஊக்குவிக்க இதை செய்தேன் என்று கூறினார்.