
மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது.
ஜெயலலிதாவின் சேலம் பிரச்சாரக்கூட்டத்திலும், வெயில் கொடுமையால் இருவர் பலியாகி உள்ள நிலையில் இந்தத் தகவல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், “கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்களுக்காக கோவையிலும், திருப்பூர், ஈரோடு மாவட்ட வேட்பாளர்களுக்காக பெருந்துரையிலும் பிரச்சாரக்கூட்டம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார். ஆனால் இன்று சேலத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் இம்மாவட்டத்தச் சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுகமும் நடந்துவிட்டது.
இப்படி ஒட்டுமொத்த மேற்குமாவட்ட வேட்பாளர்களுக்கும் சேலத்திலேயே அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டுவிட்டதால் கோவை, பெருந்துறை பிரச்சாரக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஜெயலலிதாவின் உடல் நிலையே முக்கிய காரணம்” என்றும் சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க.வட்டாரத்தில் விசாரித்தபோது, “மேலிடத்தில் இருந்து அப்படி ஒரு தகவல் இன்னும் வரவில்லை. கோவை, பெருந்துறை இரு இடங்களிலும் பிரச்சாரக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன” என்று பதில் வந்தது.
Patrikai.com official YouTube Channel