டெல்லி: ஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம், இது தேச பக்தி அல்ல என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஷ்வாமி சிக்கியுள்ளார். அவர்மீது மும்பை காவதுறையினர் சுமார் 3600 பங்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அர்னாப் கோஷ்வாமி, . ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) (TV ratings agency BARC, Partho Dasgupta ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி தாஸ்குப்தாவுக்கும் இடையில், நடைபெற்ற வாட்ஸ் ஆப் உரையால் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, மோடியை வெற்றிபெற வைக்கும் நோக்கில், பாலகோட் தாக்குதல் நடத்துவதற்கு 3 நாட்களாக (2019ம் ஆண்டு பிப்ரவரி 23ந்தேதி ) முன்பாக இந்த விவாதம் நடைபெற்றுள்ளது தெரிய வந்ததுள்ளது. அதையடுத்து, 2019ம் ஆண்டு பிப்ரவரி 26 ந்தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் புகுந்து, அங்குள்ள கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி சுமார் 300 பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் அழித்தது.
இந்தியாவின் ராணுவ நிகழ்வுகள் யாருக்கும் தெரியாத வகையிலேயே ரகசியம் காக்கப்படும். அதுபோல, இந்த தாக்குதல் தொடர்பான செய்தி, பிரதமர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகே தெரிய வந்தது. ஆனால், தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே, அர்னாப் கோஸ்வாமி, பார்க் தலைவருடன் உரையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்த ராகுல்காந்தி, “ஒரு பத்திரிகையாளருக்கு அதிகாரப்பூர்வமான ராணுவ ரகசியங்களை வழங்குவது கிரிமினல் குற்றம் என்று விளாசியதுடன, இதுபோன்ற செயல்கள் விமானப்படைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது தேசபக்தி அல்ல. இது ஒரு குற்றச் செயல், அது விசாரிக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.