
நேப்பிள்ஸ்: இத்தாலியிலுள்ள நபோலி கால்பந்து ஸ்டேடியம், டியாகோ மாரடோனா ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 25ம் தேதி மாரடோனா மரணமடைந்து சிலமணி நேரங்களுக்குள்ளாகவே இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணமும் இருக்கிறது. ஏனெனில், இந்த நபோலி கிளப் அணியில் விளையாடிய மாரடோனா, தனது அணியை இரண்டுமுறை இத்தாலி லீக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற வைத்துள்ளார். எனவே, அவரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்படுவதாக நேப்பிள்ஸ் டவுன் ஹால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]