கடந்த புதன் இரவு இத்தாலியை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பூகம்பங்கள் உலுக்கி எடுத்தன. இதில் உசிட்டா என்ற மலையோர கிராமம் முற்றிலும் சேதமடைந்தது.

italy_eq1

மத்திய இத்தாலியில் உள்ள விஸ்ஸோ நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரோம்,வெனிஸ் மற்றும் நேப்பிள்ஸ் நகரில் நன்கு உணரப்பட்டது. இது இரு மாதங்களுக்கு முன் 300 பேரின் உயிரை பலி வாங்கிய நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு வெகு அருகாமையில் இருக்கிறது. இரு பூகம்பங்களும், 5.4 மற்றும் 6 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த விஸ்ஸோ நகர மக்கள் வீதிகளில் வந்து தஞ்சமடைந்தனர். அலுவலகத்திலிருந்து தப்பி ஓடி வந்த பெண்மணி தன்மீது சுவர் இடிந்து விழுந்ததாக கூறியிருக்கிறார். அலமாரியில் இருந்த பொருட்கள் அத்தனையும் உருண்டு விழவே மக்கள் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வெளியே ஓடி வந்தனர். வெளியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

italy_eq2

இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்ததாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு 73 வயது முதியவர் பூகம்பம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. ரோம் நகரில் பல நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிய வந்திருக்கிறது.