ரோம்:
அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை கடந்த ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550-க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து மூழ்கும் நிலையில் தத்தளிக்க ஆரம்பித்தது. மரண பயத்தில் பலர் படகில் இருந்து குதித்தார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை கப்பல், படகில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.
பாதுகாப்பு மிதவைகளை பயணிகளை நோக்கி வீசப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த மீட்பு படகுகளையும் உடனடியாக கீழே இறக்கி தத்தளித்தவர்களை மீட்டனர்.
மொத்தம் 562 பேர் மீட்கப்பட்டனர். ஏழு பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மேலும் பலரை காணவில்லை.
மிகச் சிறிய படகில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் லிபியா அல்லது துருக்கி நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அணுமானிக்கப்படுகிறது.