சென்னை:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை செயல்படவிடாமல் கிரண்பேடி தடுப்பதை ஏற்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிர்வாகம் செய்யவிடாமல் தடுக்கும் புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது.

நியமிக்கப்பட்டவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குமான வித்தியாசத்தை ஆளுநர் கிரண்பேடி உணர்ந்துகொள்வது அவரின் கடமையாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிர்வாகம் செய்யவிடாமல் தடுக்கும் புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel