புதுடெல்லி: தன்னை ஒரு செளக்கிதார் (காவல்காரன்) என்று நாட்டின் பிரதமர் மோடி, தேர்தலுக்காக சொல்லிக்கொண்டாலும், காவல்காரர்களின் உண்மையான நிலை, பரிதாபத்திலும் பரிதாபம்!
செயலில் ஒன்றுமே இல்லாவிட்டாலும், தேர்தலுக்கான வெற்று முழக்கங்களை வெளியிடுவதில் மோடிக்கு நிகர் அவரேதான்.
அவரின் வெற்று பிதற்றல்களில் சமீபத்திய வரவுதான் இந்த செளக்கிதார் கோஷம். நாட்டைக் காக்கும் ஒரு காவல்காரனாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் மோடி.
ஆனால், உண்மையில், காவல்காரர்களின் (நடைமுறையில் நம்மால் செக்யூரிட்டி என்று அழைக்கப்படுவோர்) நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால், மிகவும் கொடுமை..!
12 மணிநேர வேலை, மிகக் குறைவான ஊதியம், மிக அபூர்வமான வார விடுமுறை போன்றவைதான் அவர்களின் தற்போதைய பணி நிலை. அவர்களைப் பணியமர்த்தும் தனியார் ஏஜென்சிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, செளக்கிதார்களை சுரண்டுகின்றன.
இவர்கள் முற்றிலும் பணிப் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத சூழலில்தான் பணியாற்றுகிறார்கள். நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டமும், இவர்களின் இந்த பரிதாப நிலைக்கு ஒரு முக்கிய காரணம்.
நிலைமை இப்படியிருக்கையில்தான், குஜராத் வளர்ச்சி நாயகர் என்று ஊடகங்களால் புனையப்பட்ட வெற்று கோஷங்களின் நாயகரான நமது பிரதமர், இந்த ‘செளக்கிதார்’ அவதாரத்தை எடுத்துள்ளார்.
வேறு ஒன்றுமில்லை… துப்புரவுத் தொழிலாளர்களின் காலைக் கழுவியது போன்றதுதான் இதுவும்.
– மதுரை மாயாண்டி