டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும்  பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள், அஜித்பவார்மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் மீது விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில், தற்போது மத்திய பாஜக அரசின் ஆதரவாளராக அஜித்பவார் மாறி இருப்பதால், அதற்கான நன்றி கடனமாக, அவரது முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு உள்ளன. இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த காலத்தில், காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார்  துணைமுதல்வராக இருந்தார். அவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை , அமலாக்கத்துறை என மத்திய அரசின் நிறுவனங்கள் சோதனை நடத்தி, அவருக்கு  சொந்தமான ரூ.1000 மதிப்பிலான சொத்துக்கள், வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்தது. முன்னதாக அஜித்பவார் மீது,  பினாமி சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2021 ஆம் ஆண்டு   அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை துறை சோதனை நடத்தியது. இந்த பினாமி சொத்துக்கள் வழக்கில் சதாராவில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், தற்போது அவர் பாஜக கூட்டணியில் இணைந்து, தேர்தலில் வெற்றிபெற்று, மகராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவி செய்துள்ளதால், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளதுடன், அவர் பதவி ஏற்ற அடுத்த நாளே, முடக்கப்பட்ட  அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்து உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில்,  பாஜக, சிவசேனா (ஏக்நாத்), அஜித்பவாரின் கட்சி ஆகியவை கொண்ட மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.  இதைத்தொடர்ந்து,  பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  ஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அவரது பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சரத் பவார் தலைமையிலான கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, அஜித் பவார் மீதான மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் துணை முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே அவரது ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று விடுவித்துள்ளது.

எந்த ஒரு சொத்தும் அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பினாமி சொத்துக்களுக்கும் அஜித் பவார் குடும்பத்துக்கும் இடையே எந்த தொடர்பையும் உறுதி செய்ய போதிய ஆதாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.