டில்லி: 

ளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வேதுறை தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 7,200 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குள்  இருக்கின்றன. இவற்றை கவனக்குறைவாக கடக்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் ரயிலில் சிக்கி பலியாகிறார்கள். இதைத் தவிர்க்க ஆளில்லா கிராஸிங்குளிலும் ரயில் என்ஜின்களிலும் எச்சரிக்கை கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.

இதற்காக இந்திய ரயில்வே இஸ்ரோ உதவியுடன் புதிய கருவிகளை உருவாக்கியுள்ளது. இக்கருவிகள் ரயில்வே கிராஸிங்குகளில் அமைக்கப்படும் போது, ரயில் 500 மீட்டருக்கு அப்பால் வரும்போது எச்சிரக்கை ஒலி  எழுப்பும். இதன் மூலம் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரயில் நெருங்குவதை உணர்ந்து  தங்களை தற்காத்துக்கொள்ள முடியும். ரயில் என்ஜினிலும் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால் ரயில் டிரைவர் விபத்துகளை தவிர்க்க வாய்ப்பாக அமையும்.

டில்லி-மும்பை இடையேயான ரயில் பாதையில் இத்திட்டம் முதலில் அமல்படுத்தப்படும். பிறகு இத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.