டில்லி:

அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளில் இஸ்ரோ வின்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் என்று அதன் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த மேக் இன் இந்தியா திட்ட தொழில்முனைவோர் விருது வழங்கும் விழாவில் கல ந்துகொண்ட ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், ‘‘ இவ்வாறு அனுப்பப்படும் ஆண் அல்லது பெண்கள் அங்கு சில வாரங்கள் தங்கியிருப்பார்கள்.

ஆனால், இந்த முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் இஸ்ரோ புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதே சமயம் சீனா முகமைகள் எதிர்கால திட்டத்தை நிர்ணயம் செய்ய முடியாமல் போராடி வருகின்றன. இஸ்ரோ சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்ரோ தனித்தன்மையின் தீவாக விளங்கி வருகிறது. இஸ்ரோவின் சந்திரன் மற்றும் செவ்வாய் பயண வெற்றி என்பது எளிதாக கிடைத்ததல்ல. கடினமான பாதையை கடந்து தான் வெற்றி கிடைத்துள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘வின்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் ஒரு மைக்ரான் அளவு குறைபாடு ஏற்பட்டாலும் அது தோல்வியை சந்திக்க நேரிடும். செயற்கைகோள்கள் தோல்வியை சந்தித்தால் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிவிடும். ஏ.டி.எம்.கள் இயங்காது. செல்போன்கள் வேலை செய்யாது. அனைத்து பணிகளையும் மேற்கொள்வது கடினமாகும்.

நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்க முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்பம் அதிக வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு இணைந்து பயணிக்கவில்லை என்றால் நாம் வெகுதூரத்தில் நிற்க நேரிடும். வின்வெளி தொழில்நுட்பத்தில் பணியாற்றும் 7 நாடுகளில் இ ந்தியா 2ம் இடத்தில் உள்ளது’’ என்று கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய வின்வெளி முகமை, ஜப்பான், சீனா இந்த விரிசையில் இடம்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நாசா 18 முதல் 19 பில்லியன் டாலர்களை முதலீட்டை பெறுகிறது. ஆனால் இஸ்ரோ ஒரு பில்லியன் டாலரை தான் ஆண்டுதோறும் பெறுகிறது. அதேபோல் ஐரோப்பாவும் அதிக அளவில் முதலீடு செய்கிறது.

நம்மிடம் மனித மூலதனம் அதிகளவில் உள்ளது. அடிப்படை என்ஜினியரிங்கிற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ளது. செவ்வாய் 40 கோடி கி.மீ., தொலைவில் உள்ளது. செயற்கைகோள் நிலைநிறுத்தத்தை 300 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது. இந்த முயற்சியில் இதர நாடுகள் 60 சதவீதம் தோல்வியை கண்டுள்ளது. ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றோம்’’ என்றார்.

‘‘தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொண்டோம். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகியவற்றின் தோல்விக்கான காரணங்கள் நன்றாக கூர்ந்து ஆராயப்பட்டது. அதேபோல் நமது ஜிஎஸ்எல்வி தோல்வியிலும் பாடங்கள் கற்கப்பட்டது. கடினமான சமயங்களில் துணிச்சலான முடிவுகளை எ டுக்க வேண்டும்.

க்ரையோனிக் என்ஜின் சோதனை 2010ம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. செவ்வாய் கிரக பயணம் 2015ம் ஆண்டு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ. 450 கோடி செலவு செய்ய வேண்டுமா? அதற்கான தகுதி நம்மிடம் உள்ளதா? மக்கள் பணத்தை செலவிடுகிறோம் என்பன போன்ற பல கேள்விகள் எழுந்தது. விமர்சனங்களையும் எதிர்கொண்டோம்’’ என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.