பெங்களூரு:
இந்தியாவின் 100வது செயற்கோளை வரும் 12ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இது குறித்து இஸ்ரோ இயக்குனர் அண்ணாதுரை கூறுகையில், ‘‘ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1ஹெச் செயற்கைகோள் தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து அடுத்த முயற்சியாக 31 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் கர்நாடகா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதில் 28 செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்தது. இந்தியாவின் 3 செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் 100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது’’ என்றார்.