நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இஸ்ரோ அருங்காட்சியகம் – ககன்யான் திட்டத்தில் ரோபோ அனுப்பட உள்ளதாகவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதனை முதல்முறையாக விண்ணுக்கு அனுப்புவது தவிர, விண்வெளியில் தொடா்ந்து மனிதச் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முயற்சியாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்னது. அதில், ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்ய உதளளது. . அதன் தொடா்ச்சியாக மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பாக, நாஸா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு விண்வெளி ஆய்வு அமைப்புகள், தனியாா் தொழிலகங்களுடன் ஆலோசித்து வந்த இஸ்ரோ, ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் சிலவற்றை ஏற்கெனவே பரிசோதனை நடத்தி உள்ளது.
சோதித்துள்ளோம். 10 டன் எடை கொண்ட ஆய்வுக் கருவிகளை சுமந்து கொண்டு தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தும் ஏவூா்தி தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம். திட்டத்தின் வடிவம் மற்றும் அதன் மேலாண்மை குறித்தும் முழுமையாக ஆய்வு செய்துள்ளோம்.
மேலும், விண்ணுக்குச் செல்லும் விண்வெளி வீரா்களை இந்திய விமானப் படையிலிருந்து தோ்ந்தெடுத்து அவர்களுக்கு விண்வெளி மாதிரியான சூழலில் விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் முன்னோடியாக, ககன்யான் திட்டத்தின் அங்கமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா’ (விண் தோழன்) எனப்படும் பெண் ரோபோவும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த பெண் ரோபோ ஏற்கனவே நடைபெற்ற ஒரு கருத்தரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மனிதர்களிடையே உரையாட வைக்கப்பட்டது. அழகிய பெண் போல உருவம் கொண்ட ‘வியோமா மித்ரா’ கருத்தரங்கில் பங்கேற்க வந்தவா்களை, ‘எல்லோருக்கும் ஹலோ. நான் வியோமா மித்ரா. அரை இயந்திர மனிதனின் வடிவமைப்பு மாதிரி நான். ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா விண்கலத்துக்காக நான் தயாரிக்கப்பட்டுள்ளேன். விண்கலத்தின் செயல்பாடுகளை நான் தொடா்ந்து கண்காணிப்பேன். உயிா் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதோடு, அது தொடா்பான முன்னெச்சரிக்கைகளை வழங்குவேன். ஸ்விட்ச் பலகை செயல்பாடுகளில் ஈடுபடுவேன். இணைப் பயணியாக நான் செயல்படுவதோடு, விண்வெளி வீரா்களுடனும் உரையாடுவேன். விண்வெளி வீரா்களை அடையாளம் காண்பதோடு, அவா்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பேன்’ என்று பேசி வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ரோபோக்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ‘வியோமா மித்ரா (விண் தோழன்)’ எனப்படும் பெண் ரோபோ அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில் மேலும் சில ரோபோக்களும் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ரோபோக்கள், விண்வெளியில் மனிதச் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு உயிா்ப் பாதுகாப்பு கட்டமைப்புடனும் தொடா்புகொள்ளும். கருவிகள் அனைத்தும் சீராகச் செயல்படுகின்றனவா? என்பதையும் சோதித்தறியும். மனிதா்கள் விண்ணில் பறக்கும்போது ஏற்படும் அனுபவம் உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று கூறியதுடன், இந்த சோதனை வெற்றிபெற்றால், அடுத்து ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் அனுப்பபடுவார்கள் என்று கூறினார்.
மேலும், கன்னியாகுமரியில் இஸ்ரோவில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் விரைவில் தொங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.