ஶ்ரீஹரிகோட்டா:
இஸ்ரோவின் கார்டோசாட்-3 செயற்கைக் கோள் திட்டமிட்டபடி இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை 7.28 மணிக்கு கவுன்டவுன் தொடங்கிய நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
இஸ்ரோ உருவாக்கியுள்ள கார்டோசாட்-3 உடன் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக படமெடுக்கும் -வது தலைமுறை செயற்கை கோளான கார்டோசாட்-3, புவி ஆராய்ச்சி-ராணுவ ரீதியான பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்றும், புவியில் இருந்து 509 கி.மீ தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 9.28 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.