ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய தயாரிப்பான கார்டோசாட் – 2 செயற்கைக்கோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் என்பதால் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் குதூகலத்தில் உள்ளனர்.
இன்று காலை சுமார் 9.29க்கு கார்டோசார்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுண்டவுன் 28 மணி நேர கவுன்ட்வுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் சுமார் 1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதில் 3 இந்திய செயற்கைகோள்களும்,கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, யுகே மற்றும் அமெரிக்காவின் 28 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சுமந்து சென்றுள்ளது.
கார்டோசாட் – 2, செயற்கைக்கோளின் எடை 710 கிலோ. ராக்கெட் ஏவப்பட்ட 2.21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்ட பாதையில் கார்டோசாட் – 2 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.
கார்டோசாட் – 2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.