ஹைதராபாத்:
பிஎஸ்எல்வி சி – 52 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 ரிசாட்-1ஏ மற்றும் இஓஎஸ்-6 ஓசோன் சாட்-3 ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட்மூலம் இந்த செயற்கைக் கோள்களும் பிப்ரவரி 14ஆம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 4.29 மணிக்கு தொடங்கிய, து