பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, தனது தொழில்நுட்பத்தின் மூலமாக மொத்தம் 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலமாக ரூ.1245 கோடிகள் வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக பதிலளித்த அமைச்சர் கூறியதாவது, “இஸ்ரோ ஈட்டிய ரூ.1245 கோடி வருவாயானது, கடந்த 5 ஆண்டுகளில் 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் எட்டப்பட்டது.

இந்திய வெளிநாட்டு நிதிப்பரிமாற்றம் மூலம் ரூ.91.63 கோடியும், 2019ம் நிதியாண்டில் செயற்கைக்கோள் ஏவுதல் மூலம் ரூ.324.19 கோடியும், 18ம் நிதியாண்டில் ரூ.232.56 கோடியும் கிடைத்துள்ளது.

மேலும், கடந்த 5 ஆண்டு காலத்தில், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து. சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, அல்ஜீரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது மற்றும் 319 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன” என்றார் அவர்.