இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலை ஒரு மிகப்பெரிய தவறு என்று வர்ணித்துள்ள நெதன்யாகு, ஈரான் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

ஈரானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் குறிவைத்து அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ள நெதன்யாகு பழிவாங்குவதில் எங்கள் உறுதியை எதிரிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

மேலும், இஸ்ரேலின் இந்த தாக்குதல் மூலம் ஈரான் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சு ஈரானின் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், இஸ்ரேல் மீதான பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி-யின் நேரடி உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறப்படும் நிலையில் அயதுல்லா அலி கமேனி ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய பிரார்த்தனைகளுக்கு ஆயிரக்கணக்கான ஈரானியர்களை வழிநடத்துவேன் என்று கூறி இஸ்ரேலுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.