இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரதமர் நெதன்யாகு தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரும் கொரேனா தொற்று இதுவரை 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இதுவரை 4,347 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 16 பேர் உயிரிழந்து உள்ளனர். அங்கு வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் நெதன்யாகு, தனிமைப்படுத்தப்படுதலுக்கு சென்றுள்ளார்.