காசா:
பாலஸ்தீன எல்லையில் ஹமாஸ் பயங்வரவாத அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டதில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தன்று பாலஸ்தீனத்தின் தெற்கு காசா ரஃபா எல்லைப் பகுதியை இஸ்ரேல் படையினர் கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு கும்பல் எல்லையை தாண்டி ஊடுறுவ முயன்றது. இதை இஸ்ரேல் படையினர் எச்சரித்து வானத்தை நோக்கி சுட்டனர்.
ஆனால், எச்சரிக்கையையும் மீறி அந்த கும்பல் ஊடுறுவியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவத்தினர் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் 4 வீரர்கள் காயமடைந்தனர். இறந்தவர்கள் சலாம் சபாஹ், அப்துல்லா அபு ஷேகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் 17 வயது நிரம்பியரர்கள். இச்சம்பவத்தால் பாலஸ்தீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இச்சம்பவம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதாயாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 18 தீவிரவாதிகள் மீது இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 தீவிரவாதிகளை குறிவைத்து வான் வழியிலும், குண்டுகள் வீசியும் தாக்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்பு பிடியில் உள்ள டெய்ர் எல் பாலாக் ராணுவ சுற்றுசுவர் அருகேயும், ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை, பயிற்சியகம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்தது’’ என்றார்.