இஸ்ரேல்: 

னைத்து வரி வருவாய் நிலுவைகளையும் இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றியுள்ளதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான ஹூசைன் அல் ஷேக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேல் அரசாங்கம் சுமார் 1.2 பில்லியன் டாலர் வரி வருவாயை பாலஸ்தீனிய ஆணையத்தின் கருவூலத்திற்கு இஸ்ரேல் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையில் சில பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களைக் குறித்து ஆறுமாத கால இடைவேளைக்குப் பின்னர் நவம்பர் மாதம் பாலஸ்தீனிய ஆணையத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்டுதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வுகளையும் முடிவுக்கு கொண்டுவந்ததாக அறிவித்தார், இஸ்ரேலிய இறையாண்மையை திணிக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக பாலஸ்தீனிய ஆணையம் இஸ்ரேலின் வரி வருவாயை ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின, ஆனால் தற்போது வரி வருவாயை பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.