ஜெருசலேம்: பாலஸ்தீனம் என்னும் நாடு இனி ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு  ஆவேசமாக பேசியுள்ளார். இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த  2023 முதல்  தொடங்கிய போர் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தபோர் காரணமாக காஸா பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த போர் காரணமாக,  இதுவரை  64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.  மேலும் அங்கு கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் உணவுக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

இதனால், காஸா மீதான போரை கைவிட வேண்டும், அதற்காக போர் நிறுத்தம் செய்ய இந்தியா உள்படபல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்  பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு புதிய யூத குடியிருப்பை அமைக்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,

இனி ஒருபோதும் பாலஸ்தீனம் என்னும் நாடு அமையாது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று பேசினார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த பேச்சு உலக அலவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.