டெல் அவிவ்: இஸ்ரேலில் முதல் நபராக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கொரோனா, தடுப்பூசியை போட்டு கொண்டார்.

அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹூ துவங்கி வைத்து, முதல் நபராக, மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டு கொண்டார். இதன் பின்னர் கூறிய அவர், தடுப்பூசி மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த நாள் மிகச்சிறந்த நாள் என்று தெரிவித்தார். இதன் மூலம் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட முதல் உலக தலைவர் என்ற பெயர் நேதன்யாகுக்கு கிடைத்திருக்கிறது.