பிரிட்டிஷ் பிரஜைகள் உடனடியாக லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்,
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவே இல்லாமல் தொடர்ந்து வரும் நிலையில் ஹிஸ்புல்லா மீதான தங்கள் தாக்குதலுக்கு நடுவே யாரும் வரவேண்டாம் என்று பொதுமக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதையடுத்து லெபனான் நாட்டில் உள்ள பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை அடுத்து லெபனானுக்கான அனைத்து பயணங்களையும் ரத்து செய்ய பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், லெபனான் நாட்டில் உள்ள சுமார் 10,000 பிரிட்டன் நாட்டவரை மீட்க இங்கிலாந்து ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 700 ராணுவ வீரர்கள் சைப்ரஸ் செல்லவுள்ளனர்.