இஸ்ரேல்:
க்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது.

இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பைசர்/பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு போட ஆரம்பித்தது.
அமெரிக்கா போன்ற நாடுகளே நோய்த்தடுப்பு இலக்குகளில் பின்தங்கி இருக்கும்போது, இஸ்ரேல் தன்னுடைய 9.2 சதவீதம் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளை போட்டுள்ளது என்ற காரணத்தினால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் தற்போது தன்னுடைய மூன்றாவது தேசிய முழு அடைப்பில் உள்ளது, இஸ்ரேலில் தற்போது வரை 4,35,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதைப்பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடயாஹு தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேலில் தற்போது ஒரு நாளைக்கு 1,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது, ஆகையால் அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்திலேயே மக்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 மில்லியன் அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார், ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்று கடந்த வாரம் ஜோ பைடன் ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சனம் செய்துள்ளார், இந்நிலையில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது  என செய்தி வெளியாகியுள்ளது.