வாஷிங்டன்: காஷ்மீது 60 நாட்கள் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். காஸா இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் காஸா இடையிலான போர் கடந்த இரண்டாவது ஆண்டாக நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் காசா பகுதி சுடுகாடாக மாறி உள்ளது. அங்கு கடும் உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட சில முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், ”60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், காசா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர வேண்டும். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.