வாஷிங்டன்: இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது எகிப்தில் நடைபெறும் `அமைதி – 2025’ உச்சி மாநாடில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் – காசா இடையே போர் மூண்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரில் காசாவின் 80 சதவிகித பகுதிகள்  உருக்குலைந்தன.  ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் அங்கு பசி, பட்டினி பஞ்சமும் தலைவிரித்தாடியது. இதையடுத்து, போரை நிறுத்துவது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து, போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்பும் தீவிரமாக களமிறங்கினார்.

இந்த நிலையில்,  அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வகையில் எகிப்தில் மாநாடுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி`அமைதி – 2025’ உச்சி  மாநாடு நேற்று (அக் 13ந்தேதி) நடைபெற்றது.  எகிப்து அதிபர் அப்தல் பத்தா அல்-சிசி தலைமையில் , டிரம்ப் முன்னிலையில்,  நடந்த மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தானது.

இதில்,  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து அமைதி பிறந்துள்ளது.  இதைத்தொடர்ந்து, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் மத்தியஸ்தர்களாக விடுவிக்கப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

முன்னதாக காசா  போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உயிருடன் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்புவதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து,  காசா போர் நிறுத்தத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் பாராட்டு தெரிவித்தார். டிரம்பின் முயற்சியை வரவேற்றவர், இதுஐ ‘மிகவும் நல்லது’ என்றார்.

இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான தனது சூறாவளி பயணம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இஸ்ரேலிய நெசெட்டில் தனது உரையின் போது நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற தலைப்பை எழுப்ப விரும்பவில்லை என்றும், பிரதமருக்குக் கிடைத்த கைதட்டல் காரணமாக அதைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் அவர் கூறினார்