காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அங்கு பல இடங்களில் குண்டுவீசி தாக்கியது.
இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சில் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், ஹமாஸ் தாக்குதலில் இறந்தவர்களின் ஓராண்டு நினைவாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ல் நடைபெற்ற கூட்டத்தின் மீது காசை-வில் இருந்து ஹமாஸ் படையினர் இன்றும் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தவிர, இஸ்ரேலின் ஹைபா நகர் மீது ஹெஸ்பொல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – காசா இடையேயான போர் தொடங்கி ஓராண்டு ஆன நிலையிலும் இந்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது.