புதுடெல்லி:
இந்தியாவில் புதிய மாகாணத்தை உருவாக்கியிருப்பதாக, ஐஎஸ். தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டம் அம்ஷிபோரா நகரில் இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவில் விலாயா ஆஃப் ஹிந்த் என் புதியா மாகாணத்தை உருவாக்கியிருப்பதாக ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் அமக் நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்ட செய்தியில், இரு தரப்பு மோதலுக்குப் பிறகு புதிய மாகாணம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய வரைபடத்தை தயாரிக்க ஜிகாதிகள் உதவுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தர வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என பிரிவினைவாதிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.