மலேசியா:
இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மலேசிய நாட்டவர் அல்ல; ஆனால் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்று மலேசிய பிரதமர் கூறி உள்ளார்.
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. மேலும், ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மலேசியா நாட்டில் உள்ள ஜாகிர் நாயக், அந்நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு தங்கி உள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால், . இன்று கோலாலம்பூர் அருகே புட்ரஜெயா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமல்ர , ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என கூறினார்.
இந்த நிலையில், ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது அந்த தகவலை மறுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து அவர் என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்று கூறினார்.
இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மலேசிய நாட்டவர் அல்ல, ஆனால் ஒரு ‘நிரந்தர குடியுரிமை’ பெற்றவர் மட்டுமே என்றும், சர்ச்சைக்குரிய வகையில் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் பேச ஜாகிர் நாயக் அனுமதிக்கப்பட மாட்டார். ஜாகிர் நாயக் செல்லும் இடங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், ஆனால், அவரை எந்த நாடும் ஏற்கத் தயாராக இல்லை” என்றும் தெரிவித்து உள்ளார்.