பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் முதல் போட்டியில், கேரள அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, தொடரை வற்றியுடன் துவக்கியது கொல்கத்தா மோகன் பகான் அணி.
ரசிர்கர்கள் இல்லாமல் ஐஎஸ்எல் தொடர் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக, அனைத்துப் போட்டிகளும் கோவா மாநிலத்திற்குள் மட்டுமே நடைபெறுகின்றன.
இத்தொடரின் முதல் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது கொல்கத்தா. ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் 62வது நிமிடத்தில், கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோலடித்தது.
அதேசமயம், கேரள அணியால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. மொத்தம் 6 கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது அந்த அணி. இறுதியில் 1-0 என்ற கணக்கில் தோற்றது கேரள அணி.