ISIS FEATURED.
கண்ணையா குமார் கைது விவகாரத்தில் நாடெங்கும் வெடித்த போராட்டங்களில் ஊடுருவி வாகனங்களுக்கு தீ வைக்க தங்களுக்கு ஆணை வந்ததாக கடிஹ்டு செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறினர்.
 
 
 
 

ISIS KANNAIYAB 3
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி , தேசவிரோத வழக்கில் கண்ணையா கைது செய்யப்பட்டு தீகார் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் அவரை விடுதலை செய்யக் கோரி நாடெங்கிலும் போராட்டத்தில் குதித்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த அகமது அலி , மேற்கு வங்கம் ஹூக்லியைச் சேர்ந்த ஆஷிக் அகமது எனும் ராஜாவை கூட்டத்திற்குள் புகுந்து பெட்ரோலைப் பயன்படுத்தி வண்டிகள் மற்றும் லாரிகளை கொளுத்த உத்தரவிட்டது தெரியவந்துள்ளது.
ஜே.கே.எச். எனும் ஜுனூட் அல் காலிஃபா இ ஹின்ட் அமைப்பைச் சேர்ந்த ராஜா, முகமது அப்துல் ஆஹாத் மற்றும் முகமது அப்சல் ஆகியோரின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது.

ISIS KANNAIYA 2இந்த அமைப்பு துவங்கப்பட்ட நோக்கம், அது தும்கூர், மேற்குவங்கம் மற்றும் பஞ்சாபில் நடத்திய கூட்டங்கள் குறித்த விவரமும் தெர்யியவந்தது.
ராஜா குறிப்பிடும் அலி என்பவர் தான் ஷாஃபி அர்மர் எனும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். பிரிவின் தலைவர் என்றும் அவரை அமெரிக்க விமானத்தாக்குதலில் கொலை செய்துவிட்டதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஷிக்கை வேவு பார்க்க, நீச்சல் அடிக்க மற்றும் வரைபடம் தயரிக்கவும் பயிற்சி பெறுமாறு பணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆஷிக் ஒரு இந்துப் பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்தப்பெண் மதம் மாறித் திருமணம் செய்ய்ய முடியாது என்று கூறிய விரக்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ல் இணைந்ததாகத் தெரிவித்தார்.
ISIS INDIAஅறிவியல் பட்டதாரியான அஹத் சிங்கபூர், சவூதி மற்ட்ரும் ஐக்கிய அரபு எமிரட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடனான தொடர்பினால் சிரியாவிற்கு சென்று அங்குள்ள கள நிலவரத்தைப் பார்க்க விரும்பியதாகவும் ஆனால் தாம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தாம் ஏழை முஸ்லிம் மக்களுக்கும் போரினால் பதிக்கப்பட்டவர்களுக்கும் உதவே முதலில் விரும்பியதாவும் தெரிவித்தார்.