தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின் 2017-ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில தினங்களாக வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார், கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று தகவல் வெளியானது.
பேட்டியில் கேட்கும் போது “வெப் சீரிஸில் நடிப்பீர்களா” எனும் கேள்விக்கு “கண்டிப்பாக நடிப்பேன்” என்று வடிவேலு கூறியுள்ளார் ஆனால் இது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. இப்போதைக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியென அவர் நெருங்கிய வட்டாரம் கூறியுள்ளது .