அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பூமராங் ஆகும் நிலையில் அடுத்ததாக அவர் ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது, வர்த்தக வரி உயர்வு, அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என்று பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கலை சந்தித்து வரும் டிரம்ப் மற்றொரு பக்கம் அரசியல் சீட்டாட்டத்தில் சீட்டே பிடிக்கத் தெரியாத எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் சகல அதிகாரம் பொருந்திய பதவியை கொடுத்தது உள்கட்சியிலும் அவருக்கு சரிவை ஏற்படுத்தியது.

மேலும், அமெரிக்க வரலாற்றை புரட்டிப்போட்டு மூன்றாவது முறையாக அதிபர் பதவியேற்க துடித்துக்கொண்டிருக்கும் டிரம்ப்புக்கு சவால் விடும் வகையில் புது கட்சி தொடங்க எலான் மஸ்க் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் அதேவேளையில், நேட்டோ உதவியுடன் ரஷ்யாவை மண்டியிட வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘பிளான் பி’ ஒன்றை வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அந்த பிளான் பி-யை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நேட்டோ நாடுகள் செயல்படுத்தும் நிலையில் அது அணுஆயுதப் போராக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் டிரம்ப் – மஸ்க் இடையே மோதல்… வேலியில் ஓடியதை வேட்டியில் விட்டகதையானது…