சென்னை:
திரையரங்குகளில் மாநில அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தற்போது, திரையரங்க டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனில் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் சேவைக்கட்டணமாக குறிப்பிட்ட அளவு பணம் வசூலித்து வருகிறது. இது ஒரே நபர் பல டிக்கெடடுக் கள் எடுத்தாலும், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் என தனித்தனியாக சேவை கட்டணம் வசூலித்து மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசு, ஆன்லைன் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், ஒரே நபர் எத்தனை எத்தனை டிக்கெட் எடுத்தாலும் ஒரு டிக்கெட்டுக்கு உரிய சேவை கட்டணம் மட்டுமே பெறவேண்டும் என்று அறிவித்தது.
ஆனால், இதை தனியார் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தாத நிலையில், மாநில அரசே ஆன்லைன் விற்பனை செய்ய செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது