ப.பார்த்திபன் அவர்களது முகநூல் பதிவு:
ஒரே நாளில் மூடி விட்டதாய் யாரை ஏமாற்றுகிறீர்..? முற்று முழுதாய் மூட ஆறு மாதம் ஆகும்.. ஆனால் ஆலை இயங்காமல் இருக்கச் செய்யலாம்! ஆலையை மூட வேண்டுமெனில் கீழ்க்காணும் அனைத்து ஒப்புதல் ஆவணங்களும் தேவை..
… Inspector & Director of factories TNPCB(Tamilnadu pollution control board) CPCB (Central pollution control board) GT (Green tribunal) Inspector &Director -Hygiene Explosive controls – Nagpur SIPCOT project Director TNEB (TANGETCO) District Revenue commissioner District collector District police District MLA TN Minister of Industry இன்னும் உள்ளது.
எனினும், இதில் மிக முக்கியமானது TNPCB ஒரு அறிக்கையை TNEB க்கு தக்க காரணங்களுடன் கொடுக்க வேண்டும். அதனுடனேயே மேற்சொன்ன எல்லா துறைகளுக்கும் நகலாக(Cc -Copy to communicate) அனுப்படவேண்டும். பின்பு அந்த தொழிற்சாலையின் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு TNEB distribution முனையிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு இடங்களிலும் அரசு சீல் வைக்கப்படும். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததும் மீண்டும் TNEB, தொடர்புடய TNPCB க்கு கடிதம் மூலம் அறிக்கையாக அனுப்பிவிடும்.
பிறகுதான் அரசு மூடுவதற்கான உத்தரவை தொடர்புடய தொழில் துறை மந்திரி மூலம் தொடர்புடைய மேற்சொன்ன துறைகள் மூலம் அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு அரசு செக்கியூரிட்டிகளை அங்கே போடுவார்கள்..! இது எல்லா முறைகளும் உடனே நடக்க சாத்தியமற்ற செயல்.. ஏன் எனில், ஒவ்வொரு துறையையும் தாமதப்படுத்த வேதாந்தா நிறுவனம் பணத்தால் நிறுத்தி வைக்கவே முயற்சிக்கும்.
இதை எதுவுமே செய்யாமல் வெறுமனே தொழிற்சாலை இனிமேல் இயங்காது என்று ஒரு தலைமை செயலக லெட்டர்பேட் மூலம் சொல்வது; இப்போதைக்கு மக்களை மடை மாற்றவே என்க! முதலில் தொழிற்சாலைக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டு EHV Switch Yard-ல் சீல் வைக்கப்படவேண்டும்! உள்ளே இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் (permanent Shut down) செயல்பாடுகளை முடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேற வேண்டும்.
ஆபத்தான கெமிக்கல் வாயு இன்ன பிற எல்லாம் வெளியேற்றப்படவேண்டும். இது எதுவுமே செய்யாமல் ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வதை இந்த அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் என் போன்ற அனுபவம் பெற்ற தொழிற்சாலைகளிலேயே ஊறிப் போன பொறியாளர்கள் ஒருவர்கூட நம்ப மாட்டார்கள்! ஆக மக்களை தற்காலிகமாக மடைமாற்றும் ஒரு நாடகமே…!
இவ்வளவு கோடிகளை கொட்டி லாபம் பார்த்த ஒரு முதலாளி ஒருபோதும் மூட விடமாட்டான் இதுதான் உண்மை நிலை என்க! மூட வேண்டும் என்றால் மேற்சொன்ன அத்தனை ஒப்புதல்களும் மூடுவதற்கான தக்க காரணங்களுடன் எல்லோரும் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகுதான் மின்சாரம் துண்டிக்கப்படும்..! பிறகு ஒவ்வொன்றாக நடைபெறும்..!
இன்றிலிருந்து தொடங்கினாலே இன்னும் ஆறு மாதத்திற்குள் மூட முடியுமே அன்றி, இந்த உடனே ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வது அபத்தமானது! அதேநேரத்தில்….. இந்த எல்லா நடைமுறைகளும் முடியும்வரை தொழிற்சாலையை இயக்கவோ, பராமரிக்கவோ கூடாது என்று உடனடி அறிக்கையை TNPCB மற்றும் Inspector of factories போன்ற அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையில் தொழிற்சாலை வாயில் கேட் அல்லது சுற்று மதில் சுவரில் ஒட்டி கேட்டில் சீல் வைக்க வேண்டும்..! அது நடைபெற வேண்டுமானால் முதலில் தொழிற்சாலையின் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும்!
சிந்தியுங்கள் செயல்படுங்கள் வெற்றுக் கோபங்களும் அறிவற்ற அரசியல் சிந்தனைகளும் படுகொலையில்தான் முடியும் என்பதற்கு இதுவே சான்று. எனவே இனிமேல் களபலி கொடுப்பதை தவிர்த்து மேற்சொன்ன அதிகாரிகளை ஆக்கிரமிப்பது நன்மை பயக்கும்! சொல்ல நிறைய உள்ளது எல்லாவற்றையும் இங்கேயே சொல்லவும் இயலாது…..!
தோழமையுடன்,