சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி-யுடன் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கைகோர்த்துள்ள நிலையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும் முதல் முறையாக கைகோர்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிரின், உபேந்திரா, மகேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் ஆகியோரின் கேரக்டர் குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது.

இதில் ராஜசேகர் என்ற கேரக்டரில் சத்யராஜ் நடிப்பதாக இன்று போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதையடுத்து கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறாரா அல்லது கேரக்டர் ரோலா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.