டில்லி:

கடந்த காலங்களில் இருந்து வேறுபட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தின் சமீபத்திய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மோகன் பகத் பேசுகையில், ‘‘இந்து மதம் எவ்விதமான ஆடை கட்டுப்பாடு மற்றும் உணவு பழக்க வழக்கங்களை வகுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி எந்த அரசியல் கட்சியில் வேண்டுமெனாலும் பணியாற்றலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கலாச்சார அமைப்பு என நீண்ட நாட்களாக கூறப்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜக.வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அக்கட்சியின் முக்கிய பதவிகளில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பாஜக.வை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்ற கண்ணோட்டத்தில் மோகன் பகத் பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் மக்களுக்கும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். ஆளும் கட்சியின் கொள்கைகளை கொண்ட எந்த அமைப்புக்கும் பதிலளிக்க வேண்டியது கிடையாது. சமீபத்தில் பெங்களூரு பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மீது சமூக வளைதளங்களில் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

இந்துத்வா கொள்கை என்ற ஒரே ஒரு கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. அதனால் மோகன் பகத்தின் தற்போதைய இந்த மாற்றம் எதரிகாலத்திற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. மேலும், இவரது கருதது பஜ்ரங் தள், விஹெச்பி போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு மிகப்பெரிய செய்தியாக அமைந்துள்ளது.