கொழும்பு
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ எஸ் இயக்கம் தற்கொலைப் படையினர் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். தேவாலயங்களிலும் சொகுசு ஓட்டல்களிலும் நடந்த இந்த தாக்குதலில் பல வெளிநாட்டின்ரும் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இஸ்லாமிய இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது. தற்போது சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ எஸ் இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை ஒட்டி இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டுடன் ஒரு லாரி பிடிபட்டதை அடுத்து சாலைகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐ எஸ் அமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
#BREAKING: ISIS releases video of Sri Lanka suicide bombers who conspired the 8 serial blasts in the island nation which killed 321 and injured more than 500 including several foreign nationals. Suicide bombers can be seen before the attack pledging their allegiance to Baghdadi. pic.twitter.com/68yQ60ZtYC
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 23, 2019
அதில் தற்கொலைப்படையினர் தங்கள் தாக்குதலுக்கு முன்பு கூடி நின்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் காட்சி காணப்படுகிறது.