கான்பெரா: முக்கியமான கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்துள்ளதன் மூலம், இந்திய அணிக்கு பெரிய திருப்பம் கிடைத்துள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 303 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, வார்னருக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கிய மார்னஸ் 7 ரன்களிலேயே நடராஜன் பந்துவீச்சில் பெளல்டு ஆனார்.
அதனையடுத்து, கேப்டன் ஆரோன் பின்ச்சுடன் ஜோடி சேர்ந்தார் அபாயகரமான ஸ்மித். ஆனால், அவரும் ஷர்துல் தாகுர் பந்தில் 7 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் ஆரோன் பின்ச், தாக்குப்பிடித்து ஆடி வந்தார். ஆனால், அவர் 75 ரன்களில் இருந்தபோது, ஜடேஜாவால் அவுட் செய்யப்பட்டார்.
அவருக்கு முன்னதாகவே, ஷர்துல் தாகுர், ஹென்ரிகுஸை 22 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். இந்த இரண்டு விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 போட்டிகளிலும் சதம் அடித்தார் ஸ்மித். இந்தமுறை அவர் நடையைக் கட்டிவிட்டார் விரைவாகவே. தற்போது, கெமரோன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கேரே ஆகியோர் மெதுவாக ஆடிவருகிறார்கள்.
தற்போதைய நிலையில், 132 பந்துகளில், 164 ரன்களை அடிக்க வேண்டியுள்ளது. மேலும், சில விக்கெட்டுகள் விரைவாக வீழும் பட்சத்தில், அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.