
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், அம்மாநிலத்தின் பாஜக அரசு, உண்மை நிலவரங்களை மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குஜராத்தில், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு மட்டுமல்ல, சுடுகாடுகளிலும் கடும் நெருக்கடி நிலவுகிறது. நிலைமை இப்படியிருக்க, அம்மாநில அரசின் ஒரு செயல், அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
வைரஸ் எதிர்ப்பு ஊசி மருந்தான ரெம்டிசிவர் மருந்தை, சுமார் 25000 குப்பிகள் வரை, உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துக்கு, குஜராத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மருந்தை வாங்குவதற்கு, மக்கள் பலமணிநேரங்கள் வரிசையில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கொரோனா தாக்கத்தின் உண்மை நிலவரங்களை, அம்மாநில பாஜக அரசு பெரியளவில் மறைத்து வருவதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில், சமீபத்திய நிலவரப்படி, மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 44298 என்பதாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 81 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]