ரவுண்ட்ஸ்பாய் கேள்வி.. ராமண்ணா பதில்:

“அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் ”  என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே..

 ரிங் மாஸ்டர் (பா.ஜ.க.)  சொன்னால் சரியாத்தான் இருக்கும்!

அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படுமா?

“ஒரு முதல்வராக இருந்து ஈழ விவகாரத்தில் என்ன செய்து விடமுடியும்.. யார் முதல்வராக இருந்தாலும் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தே இருக்கும்”  என்கிறார்கள் கருணாநிதி தொண்டர்கள்.

அப்படியே வைத்துக்கொள்வோம்.

இதுபோல மத்திய அரசுக்கு அடிமையாய் இருப்பவரை ஏன், உலகிலேயே மிகப்பெரிய வீரர் போல, உலகத் தமிழர் அத்தனை பேரையும் காப்பவராக பூதாகரப்படுத்துகிறார்கள்… போஸ்டர் ஒட்டுகிறார்கள், மீட்டிங்கில் பேசுகிறார்கள்..?

ஜினி – கருணாநிதி

அதே போலத்தான் ரஜினி ரசிகர்களும்.

“பொது விசயங்களில் ரஜினி குரல் கொடுப்பதில்லை. அவரது படங்களுக்கு அநியாயமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைக் கூட கண்டுகொள்வதில்லையே” என்றால், “அவர் ஒரு நடிகர். அவ்வளவுதானே.. அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்” என்கிறார்கள் ரசிகர்கள்.

சரிதான்.

அப்படியானால் வெறும் நடிகர், யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசியதை வைத்து அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஏன் தீர்மானிக்கிறார்கள்?

கருணாநிதி, ரஜினி என்றல்ல.. எல்லா தலைவர்களின் தொண்டர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஒருவரை சரியான கோணத்தில் ஆராய்ந்து, அவரது நிறைகுறைகளை உணர்ந்து தலைவராக ஏற்கும் பக்குவம் நமது மக்களிடம் இல்லை. கண்மூடித்தனமாக ஒருவர் மீது அபிமானம் வைக்கிறார்கள்.. அந்தத் தலைவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறார்கள்.

மக்களிடையே இருக்கும் இந்த  இந்த கண்மூடித்தனமான “ஹீரோ ஒர்ஷிப் மாறாத வரையில் அரசியல் நிலை மாறாது.

வைகை அணையை தெர்மாகோலால் மூட முயற்சித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவின் முயற்சியை தி.மு.க.வினர் கிண்டலடிப்பது ஓயவில்லையே..

கூவத்தில் படகு விட்ட தி.மு.க. ஆட்சியின் “சாதனையை” நினைத்துப் பார்த்தால் இப்படி கிண்டலடிக்க மாட்டார்கள்.

தீபா…?

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே..  “தீபா ஒரு கேள்விக்குறி..?”

தீபா

தீபாவை குமுதம் ரிப்போர்ட்டரில் இழிவு படுத்திவிட்டதாக நெட்டிசன்கள் பாய்கிறார்களே…

இந்த பாய்ச்சல் நியாயமானதுதான். ஆனால் இந்த போராளிகள் பல நேரங்களில் பாயாதது ஏன் என்பதுதான் தெரியவில்லை.

அதே  குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், “மாட்டுக்கறி திண்ணும் ஐ.ஐ.டி. மாணவர்கள் காட்டு மிராண்டிகள்” என்று கார்ட்டுன் வெளியானது. இது குறித்து முகநூல் உட்பட சமூகவலைதளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இது பெரும்பாலான நெட்டிசன்களை ஈர்க்கவில்லை.

சமீபத்தில் சென்னையில் மனநோயாளி ஒருவரை போதையில் இருந்த ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டார்கள். “மாட்டுக்கறி விவகாரத்தில் இந்து முதியவர், இஸ்லாமிய இளைஞர்களால் அடித்துக்கொலை” என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி  வெளியிட்டது.

இது தவறான செய்தி என சில இணைய இதழ்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதை பெரும்பாலான நெட்டிசன்கள் கண்டுகொள்ளவில்லை. தினத்தந்திக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஆக லெக்கின்ஸ், சொப்பன சுந்தரி போன்ற விவகாரங்கள்தான் இணைய போராளிகளையும் ஈர்க்கிறது. என்ன செய்ய?

 மாட்டு இறைச்சி விவகாரத்தில் ஆவேசம் கொண்டு அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு, தமீமும் அன்சாரி ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்களே..

மாட்டு இறைச்சி தடை என்பதற்காக தமீமும் வெளிநடப்பு செய்திருக்கலாம். தனியரசு, கருணாஸ் ஆகியோர் அதற்காக வெளிநடப்பு செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஓ.பி.எஸ். – சரவணன்

அதிமுக எம்.எல்.ஏ. சரவணன், “எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டார்கள்” என்று பேசிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதே..

சசிகலா தரப்பில் பத்து கோடி வரை தர தயாராக இருந்தார்கள் என்று அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரே.. “ஓபிஎ் கூட இருந்தா மந்திரி ஆகிடலாம்.. 500 கோடி ரூபாய் சம்பாதிக்கணும்கிறதுதான் லட்சியம்” என்று பேசியது ஏன் கவனிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.

நதிகள் இணைப்புக்காக தான் அறித்த ஒரு கோடி ரூபாயை எப்போது வேண்டுமானாலும் தரத் தயார் என்று விசாயிகள் அமைப்புத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் ரஜினி தெரிவித்தாராமே

15 வருடங்களாக இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் ரஜினி. கடந்த வருடம் இதே அய்யாக்கண்ணு, “ரஜினி அறிவித்தபடி ஒரு கோடி ரூபாயை மத்திய அல்லது மாநில அரசிடம் ஒரு மாதத்தில் தர வேண்டும். இல்லாவிட்டால் அவர் வீட்டும் முன் போராட்டம் நடத்துவோம்” என்று முழங்கினார். இது குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதம், இரண்டு மாதம் என ஒரு வருடம் கழித்து அய்யாக்கண்ணுவை ரஜினி அழைத்திருக்கிறார். வழக்கம்போல, “எப்போது வேண்டுமானாலும் ஒரு கோடி தரத் தயார்” என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் அய்யாக்கண்ணுவின் ஆடை அவிழ்க்கப்பட்டது இப்போதுதான்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச் செல்வனே, தனது தொகுதி பிரச்சினையை அரசு கண்டுகொள்ளவில்லை என்று வெளிநடப்பு செய்திருக்கிறாரே..

மூன்று வருடங்களாக தனது கோரிக்கையை அரசு பொருட்படுத்தவில்லை என்கிறார்.  ஜெயலலிதா முதல்வராக இருந்த இரண்டை வருடங்கள் இவருக்கு வெளிநடப்பு செய்யத் தோன்றவில்லை பாருங்கள்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் மிக இழிவான முறையில் நடந்துகொண்டிருக்கிறார்களே..

சிஸ்டத்தை மாற்றுவதற்கு முன் தன் ரசிகர்களை மாற்ற வேண்டும் ரஜினி.

பாஜக வில் சாதிகள் கிடையாது என்று  வெங்கையா நாயுடு  கூறியிருக்கிறாரே

நாயுடு சொன்னால் சரிதான்.