நொய்டா

த்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பீகார் சிறுமிக்கு குரங்கு அம்மை தொற்று இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

 

Sample picture

உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது.   தற்போது பரவல் குறைந்து வரும் வேளையில் குரங்கு அம்மை பரவுவதால் மீண்டும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.  இதுவரை 20க்கும் அதிகமான நாடுகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை இந்தியாவில் இதுவரை யாருக்கும் தொற்றவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி வசித்து வருகிறார்.  இவருக்கு மனைவி, 7 வயது மகன் மற்றும் 5 வயது மகள் உள்ளனர்.  மகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது.  ஆகவே அவர் தியாகி என்னும் மருத்துவரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

மருத்துவர் தியாகி அச்சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கும் போது சிறுமியின் நெற்றியில் கொப்புளங்களைக் கவனித்துள்ளார்.  சில நாட்களில் அது உடலெங்கும் பரவியதால் இது குரங்கு அம்மையாக இருக்கலாம் என்னும் அச்சம் எழுந்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சிறுமியைத் தனிமைப்படுத்திய மருத்துவக் குழு அவளுடைய ரத்த மாதிரிகளை புனே தேசிய சோதனை நிலையத்துக்கு அனுப்பி உள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணனுக்கும் இதே கோளாறு இருந்தது தெரிய வந்ததால் அந்த குடும்பத்தினர் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவ சோதனை முடிவுகளுக்கு பிறகே சிறுமிக்கு குரங்கு அம்மையா என உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.