போபால்: இஸ்லாமிய ஆண் – இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது..  அது கறைபடிந்த திருமணம் என மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.. இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி செய்யும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டால் சமுதாயத்தில் புறக்கணிப்படுவோம் என்ற அச்சத்தில் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த பெண், பெற்றோருக்கு தெரியாமல், , வீட்டில் இருந்தது நகை பணம் உள்ளிட்டவரையும் எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு திருமண சட்டம், 1954இன் கீழ் அவர்கள்  தங்களின் கலப்பு திருமணத்தை (inter-faith marriage) பதிவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க தம்பதியர் மனு தாக்கல் செய்தனர். அதாவது, தங்களது  கலப்பு திருமணம் நடந்தால் சமூகம் தங்களை ஒதுக்கிவிடும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணத்திற்காக இருவரும் மதம் மாற விரும்பவில்லை. இந்த நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் ம.பி. உயர் நீதிமன்றத்தில் தம்பதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்,  மனுவை தள்ளுபடி செய்தது.  இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணை இந்து மதத்தை சேர்ந்த பெண் திருமணம் செய்து கொள்வது முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது என கூறிய  நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா,  “சிறப்பு திருமண சடடத்தின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட, முஸ்லீம் சட்டத்தின் கீழ் வழக்கத்திற்கு மாறான திருமணமாகவே இது கருதப்படும்” என்று கூறினார். மேலும், ‘இஸ்லாமிய சட்டத்தின் படி, இஸ்லாமிய நபரும் நெருப்பை வழிபடும் பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற திருமணம் செல்லாது என்றும் அது கறை படிந்த திருமணமாக இருக்கும் என்று கூறினார்.  அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும், முஸ்லீம் தனிச் சட்டத்தின் கீழ் அது ஒழுங்கற்ற திருமணமாக கருதப்படும்.

மத சடங்குகள் நடைபெறாத காரணத்தால் கலப்பு திருமணத்திற்கு (inter-faith marriage) எதிராக வழக்கு தொடர முடியாது என்றாலும் தனிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டால் இம்மாதிரியான திருமணங்கள் சட்டப்பூர்வ திருமணமாக கருத முடியாது” என்றார்.

ஏற்கனவே முகமது சலீம், சம்சுதீன் ஆகியோருக்கு இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான், முஸ்லிம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே நடந்த திருமணத்தை ஒழுங்கற்ற திருமணம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.