இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா, விரைவில் தனது காதலரை மணக்க இருக்கிறார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடர்ந்து 17 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. இதனால் இரும்பு பெண்மணி என்று இவர் வர்ணிக்கப்படுகிறார்.
45 வயதான இரோம் சர்மிளா சமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூரின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 90 ஓட்டுகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தான் நீண்ட நாட்களாக காதலித்துவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்மேண்ட் கவுடின்கோ என்பவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை பாஸ்போர்ட் வைத்திராக இரோம், இங்கிலாந்து சென்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அது கிடைக்க தாமதமாகி வருகிறது. ஆகவே கேரளாவிலேயே திருமணம் நடக்க இருக்கிறது.
“இரோமின் காதலர் டெஸ்மேண்ட் கவுடின்கோ விரைவில் இந்தியா வர இருக்கிறார். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கும்” என்று இரோம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.