பாக்தாத்:  இஸ்லாமிய நாடான ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா  கொண்டு வரப்பட்டு உள்ளது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பலாத்காரத்தை சட்டப்பூர்வமாக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

 ஈராக்கில் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறுமிகளின் திருமணத்தை அனுமதிக்கும் ஒரு வரைவு சட்டம் நாடு முழுவதும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது, 9 வயது குழந்தைகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் ஈராக் சட்டத்தின் வரைவு  பெண்கள் உரிமை ஆர்வலர்கள் இது “குழந்தை பலாத்காரத்தை சட்டப்பூர்வமாக்கும்” என்று  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழந்தை பலாத்காரத்தை சட்டப்பூர்வமாக்கும்  நடவடிக்கை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாம் மதத்தில்  வன்முறை மற்றும் பெண்களுக்கான எதிரான மூட நம்பிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு உரிய ஷரியத் சட்டமும் இதை அனுமதிப்பதாக கூறுகின்றனர். அல்லாவின் பெயரை கூறி, மற்ற மதத்தினரின் தலைமை கொய்து கொடூர  கொலை செய்யும் நடவடிக்கைகளில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தி  வரும் நிலையில், பல இஸ்லாமிய நாட்டு  அரசுகளும், பெண்களின் சுதந்திரங்களை பறித்து வருகிறது. பெண்கள் படிக்க கூடாது, வாகனங்கள் இயக்ககூடாது என்று பல தடைகளை விதிப்பதுடன், பெண்கள் உச்சி முதல் உள்ளங்களால் வரை கருப்பு துணியால்  (பர்தா) மூடியிருக்க வேண்டும் என்றும், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் விதிகளை மீறும் பெண்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அப்துல் லத்தீப் ரஷீத்  தலைமையிலான ஈராக் அரசு,  பெண்கள் திருமண வயதை 9-ஆக குறைக்க அரசு முடிவு  செய்துள்ளது. அதற்கான வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேற தரப்பினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஈராக் அதிபராக குர்தீஷ் இன தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்டபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போதுரு, பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கக் கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா 2024ம் ஆண்டு  ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்,   கடுமையான எதிர்ப்புகளை பெற்றதால் திருமப்ப் பெறப்பட்டது. இந்த நிலையில், தற்போது,   நாடாளுமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில், அரசுக்கு ஆதரவுன உறுப்பினர்களின் எண்ணிக்கை  அதிகமாக இருப்பதால், அந்த மசோதாவை நிறைவேற்ற அப்துல் லத்தீப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவே  ஈராக்கில் உள்ள மதத் தலைவர்கள்,  குழந்தைத் திருமணங்கள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்படாத திருமணங்களை நடத்துவதாக சன்பார் அமைப்பு  கூறியிருந்தது. இந்த நிலையில், அதை சட்டமாக்கும் வகையில்,  பெண்களின் திருமண வயதை குறைக்கும், மசோதாவை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது.

ஈராக் அரசின் குழந்தை திருமண சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டில் கடந்த 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிநபர் அந்தஸ்து சட்டத்தின்படி, இஸ்லாமிய பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என்ற விதி நீக்கப்படும் என ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாற்றம் பெண்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கும் மற்றும் நாட்டின் ஆழமான ஆணாதிக்க சமூகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 ஈராக் பெண் எம்.பிக்களின் கூட்டணியும் இந்த மசோதாவை எதிர்த்துள்ளது. ஈராக்கை தாண்டி உலக நாடுகளை சேர்ந்த நெட்டிசன்களும், இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த முடிவு, பெண் சமூகத்தை பின்னோக்கி அழைத்துச் செல்வதாகவும் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈராக்கின் பெண்கள் உரிமைக் குழுக்கள் அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

 UNICEF ன் கூற்றுப்படி,  ஈராக்கில், குழந்தை திருமணம் என்பது பல ஆண்டுகளாக ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 28 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக, இவர்களில் 7 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர்.