பாக்தாத்:
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். .
இது ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயலா என்று முதலில் கருதப்பட்டது. பிறகு, மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பழுதே தீ விபத்துக்குக் காரணம் என்பது தெரியந்தது.