பக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்குத்தான மலையின் ஓரத்தில் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டதால் ‘ அதில் பயணித்தவர்கள், ‘உயிர் இருப்பதற்கான அறிகுறி இல்லை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது. ஈரானின் வடமேற்கில் உள்ள அஜர்பைஜானுடனான எல்லைக்கு சென்று திரும்பும்போது விபத்து நடந்துள்ளது. அதன்படி, தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 600 கிலோமீட்டர் (375 மைல்) தொலைவில் உள்ள அஜர்பைஜான் நாட்டின் எல்லையில் உள்ள, ஜோல்ஃபா நகருக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுடம், அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து, அறிநித்தும், அந்நாட்டின் அனைத்து படை பிரிவினரும் சம்பவ இடத்துக்கு சென்று தேடுததல் வேட்டை நடத்தினர். 40 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், ரஷ்யா, ஈராக் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்தன. இந்நிலையில் தான் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை, தேடுதல் குழுவினர் கண்டறிந்த நிலையில், விபத்தில் அதில் பயணித்த அனைவரும் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
செங்குத்தான மலையின் ஓரத்தில் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் ‘உயிர் இருப்பதற்கான அறிகுறி இல்லை’ ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 8 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் அதிபரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் “உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும்” கண்டறியப்படவில்லை என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி இன்று (திங்களன்று) ரெட் கிரசண்ட் சொசைட்டி தனது குழு அந்த இடத்தை அடைந்ததாக அறிவித்த சில நிமிடங்களில் தெரிவித்துள்ளது.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 600 கிமீ தொலைவில் அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் நக்சிவன் எல்லையில் உள்ள ஈரானிய நகரமான ஜோல்பாவிற்கு அருகில் விமானம் “கரடுமுரடான தரையிறக்கம்” செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டது என்று ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவாண்ட் அரசு ஊடகத்திற்கு தெரிவித்தார். அஜர்பைஜான்-ஈரானிய எல்லைக்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் செங்குத்தான மலையின் ஓரத்தில் ட்ரோன் காட்சிகள் தீப்பற்றியதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரைசியின் ஹெலிகாப்டர் ‘விபத்தில் முற்றிலும் எரிந்து விட்டது’ என அனைத்து பயணிகளும் ‘இறந்தனர்’ என மீட்பு குழுவினர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் முற்றாக எரிந்துள்ளதும் என்றும், துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது” என்று ஒரு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள இடிபாடுகளை அடைய மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் பனிப்புயல் மற்றும் கடினமான நிலப்பரப்புகளை எதிர்த்துப் போராடினர். ஈரானின் ரெட் கிரசன்ட் தலைவர் பிர் ஹொசைன் கோலிவாண்ட், “இடிபாடுகளை நாங்கள் பார்க்கிறோம், நிலைமை நன்றாக இல்லை” என்று கூறினார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாவலராகவும் நாட்டின் ஷியைட் இறையாட்சிக்குள் அவரது பதவிக்கு சாத்தியமான வாரிசாகவும் ரைசி இருந்தார். ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் இறந்ததால், அந்நாட்டின் முதல் துணை அதிபரான முகமது மொக்பர் இடைக்கால அதிபராக செயல்பட உள்ளார். அடுத்த 50 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்படும்.
ஈரான் அதிபர் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்ததும், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரான் அதிபர் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.