நாகர்கோவில்: ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 2000க்கும் அதினமான மீனவர்களை மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1,000க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் ஈரான்-இஸ்ரேல் போர் பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்கள் மீட்க வேண்டும் என மத்தியஅரசுக்கு அப்பகுதி காங்கிரஸ் எம்.பி.யான விஜய் வசந்த் மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். “மீனவர்களை பாதுகாப்பாக வீடு திரும்பக் கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய கடமை” என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விஜய்வசந்த் எம்.பி., எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாக ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் காண்டிராக்ட் பேசில் ஈரான், இஸ்ரேல் உள்பட வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஈரான் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள சுமார் 2000 மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு மீட்டு வருகிறது. அதுபோல ஆபரேஷன் சிந்து மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி, மைக்கேல் நகர், ஜார்ஜ் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன்பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு காண்டிராக் பேசில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதாவது, ‘ஸ்பான்சர்ஸ்’ எனப்படும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கீழ் பணியாற்றுகின்றனர்.
ஈரானுக்கு அதிக அளவில் செல்ல காரணமாக, இவர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். . ஒவ்வொரு முறையும் ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பியவுடன் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. பிற வளைகுடா நாடுகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதனை விட சிறந்ததாக ஈரான் இருப்பதால் மீனவர்கள், ஈரானை மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
இருப்பினும், சில மீனவர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். முதலாளிகளால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஊதியமின்மை போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தற்போது ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததால், ஈரானில் மீன்பிடி தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உவரியைச் சேர்ந்த 36 மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர். தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட கலெக்டர் மூலம் கடலோர கிராமங்களில் சிக்கிய மீனவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை மீனவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. ஒன்றிய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க ஒன்றிய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து, மீனவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மோசமான முதலாளிகளை தவிர்க்க அறிவுறுத்துதல் வழங்கப்படுவதுடன் உள்ளூரில் மீன்பிடி மற்றும் அது தொடர்பான தொழில்களை மேம்படுத்தி, வெளிநாடு செல்லும் தேவையை குறைத்தல் அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்திய தூதரகம், ஈரானில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்களுக்கும் இதேபோன்ற முயற்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மீனவர்களின் சரியான இருப்பிடம், எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு நிலையை உடனடியாக கண்டறிய வேண்டும். ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, மீனவர்களுக்கு உடனடி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகம், மீனவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யயும், தூதரகம் மூலம் மீனவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பு குறித்து தகவல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரானில் மீன்பிடி தொழிலில் மோசமான வேலை நிலைமைகள், எல்லை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல் போன்ற சவால்கள் இருப்பதால், அவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.